ரஷ்யாவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி : தங்க ஏற்றுமதிக்கு தடை விதிக்க 4, ஜி-7 நாடுகள் முடிவு
ரஷ்யாவின் தங்க ஏற்றுமதிக்கு தடை விதிக்க ஜி-7 கூட்டமைப்பில் உள்ள 4 நாடுகள் முடிவு செய்துள்ளன.
ரஷ்யா மீது பல தடைகள் விதிக்கப்பட்ட நிலையில், பொருளாதார தாக்கத்தை தவிர்க்கும் வகையில் அந்நாட்டைச் சேர்ந்த பலர், தங்கத்தின் மீது முதலீடு செய்தனர்.
இதனை தடுத்து ரஷ்யாவிற்கு மேலும் அழுத்தம் தரும் வகையில், அந்நாட்டின் தங்க ஏற்றுமதிக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் தடை விதிக்கவுள்ளன.
இந்நடவடிக்கையால் ரஷ்யாவிற்கு கடும் நெருக்கடி ஏற்படுமென இங்கிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.
Comments