ஜிஎஸ்டி இழப்பீட்டு மேல் வரி விதிப்பு மேலும் 4 ஆண்டு நீட்டிப்பு
ஜிஎஸ்டி இழப்பீட்டுக்கான மேல்வரி விதிப்பதை மேலும் நான்காண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.
2017 ஜூலை முதல் நாளில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு நடைமுறைக்கு வந்தபோது, மாநிலங்களுக்கு வரி வருவாய் இழப்பை ஈடுசெய்ய ஐந்தாண்டுகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காகப் புகையிலை, சிகரெட், ஹூக்கா, குளிர்பானங்கள், ஆடம்பர மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டது.
ஜிஎஸ்டி இழப்பீட்டுக்கான மேல்வரி விதிப்புக் காலம் ஜூன் இறுதியுடன் முடிவடைய இருந்த நிலையில் 2026ஆம் ஆண்டு மார்ச் இறுதிவரை நீட்டித்து மத்திய நிதியமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
Comments