விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட சுமார் 10 டன் கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்
கேரள மாநிலத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதை பயன்படுத்தி தமிழகத்தில் இருந்து விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட சுமார் 10 டன் கெட்டுப்போன மீன்கள் தமிழக - கேரள எல்லையான ஆரியங்காவில் பறிமுதல் செய்யப்பட்டன.
ரகசிய தகவலின் பேரில் ஆரியங்காவு பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்ட கேரள உணவு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள், 3 கண்டெய்னர் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது, அதில் சுமார் 10 டன் கெட்டுப்போன, பதப்படுத்தப்பட்ட மீன்கள் இருப்பது தெரிய வந்தது. அவை கடலூர் பகுதிகளில் இருந்து கொல்லம் கருநாகப்பள்ளி பகுதிக்கு கொண்டு செல்லப்படவிருந்தது விசாரணையில் தெரிய வந்தது.
Comments