புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாததால் சர்ச்சை

0 1959

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறும் மத்திய அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த் தாய் வாழ்த்து பாட வேண்டுமென புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச பொது சுகாதார பள்ளியை மத்தியமைச்சர் மன்சுக் மாண்டவியா திறந்து வைத்தார்.

தொடக்க விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் நிகழ்ச்சி தொடங்கப்பட்ட நிலையில், தமிழிசை செளந்தரராஜன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நிகழ்ச்சியின் நடுவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

இனி வருங்காலங்களில் ஜிப்மர் மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்படும் என ஜிப்மர் இயக்குநர் உறுதியளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments