இரு மாதங்களில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 79 ஆக சரியும் என கணிப்பு
ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அடுத்த இரு மாதங்களில் 79 ரூபாய் என்ற அளவுக்கு சரியும் என கணிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை தற்போது உயர்த்தியுள்ள நிலையில், அடுத்த மாதமும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவும், வெளிநாடுகளிலிருந்து கச்சா எண்ணெய்யை வாங்கும் இந்திய நிறுவனங்கள் அதிக அளவில் டாலர்களை வாங்கி வருவதாலும் இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவடையும் என்றே தெரிகிறது.
ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதால், வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது இந்திய முதலீடுகளை திரும்பப்பெற்று வருகின்றனர். ஜூன் 17 ஆம் தேதி வரை மட்டும், இந்தியாவிலிருந்து 28,445 கோடி ரூபாய் வெளியேறியுள்ளது.
Comments