கேண்டீன் டெண்டரில் முறைகேடு செய்ததாக புகார்... முன்னாள் கல்லூரி முதல்வர் விளக்கம் அளிக்க லஞ்ச ஒழிப்பு துறை நோட்டீஸ்!

0 1025

திருவாரூர் மருத்துவக்கலூரி மருத்துவமனை கேண்டீன் டெண்டரில் முறைகேடு செய்ததாக முன்னாள் முதல்வர் விஜயகுமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

2019ஆம் ஆண்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரியின் முதல்வராக விஜயகுமார் இருந்த போது கேண்டின் டெண்டர் விடுவதில் முறைகேடு செய்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி லஞ்ச ஒழிப்பு போலீசார் விஜயகுமாருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். தற்போது திண்டுக்கல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் டீனாக உள்ள விஜயகுமார் வரும் மாதத்துடன் ஓய்வு பெற இருந்த நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments