பிரதமர் மோடியுடன் யஷ்வந்த் சின்ஹா தொலைபேசியில் பேச்சு.. குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு தருமாறு வேண்டுகோள்..!
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு தருமாறு பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள யஷ்வந்த் சின்ஹா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஆகியோரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டுள்ளார்.
Comments