மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி சாஜித் மிர்க்கு 15 ஆண்டுகள் சிறை!
மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு நிதியுதவி அளித்து மூளையாக செயல்பட்ட தீவிரவாதி சாஜித் மீர்க்கு லாஹூர் நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லஷ்கரி இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த சாஜித் மிர், கடந்த 2005ஆம் ஆண்டு கள்ள பாஸ்போர்ட் மூலம் இந்தியாவுக்குள் நுழைந்து தாக்குதலுக்கான திட்டம் தீட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாஜித் மிர்க்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் நான்கு லட்ச ரூபாய் அபராதமும் லாஹூர் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் விதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Comments