இப்படி எல்லாமா செத்து போவாங்க மிரண்டு அரண்டு போன போலீஸ்...! அதிகம் படிச்சா இதான் பிரச்சனை

0 8755

வீட்டை விற்றும் கடனை அடைக்க இயலாத விரக்தியில் கணவன் மனைவி தங்கள் உடல் முழுவதும் மின்சார வயரை சுற்றி மின்சாரத்தை பாய்ச்சி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் அடுத்த கரு நாகப்பள்ளியை சேர்ந்தவர் சாபு, இவரது மனைவி ஷீஜா இந்த தம்பதியருக்கு 12 ஆம் வகுப்பு படிக்கின்ற மகன் இருக்கின்றான்.

பெட்டிக்கடை நடத்திவந்த சாபு, தொழில் தொடர்பாக ஏராளமாக வட்டிக்கு கடன் பெற்றிருந்தார். ஆனால் கடனை திருப்பி செலுத்த இயலாத நிலையில் குடியிருந்த சொந்த வீட்டை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

வீட்டை விற்றுவிட்டு தனது சகோதரி கணவரது வீட்டில் தங்கி இருந்த நிலையில் சாபுவும் மனைவி ஷீஜாவும் தங்கி இருந்த அறையின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது.

கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது இருவரது உடலையும் சேர்த்து மின்சார வயர் சுற்றப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தனர். 

தந்தையும் தாயும் உடலில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்து கிடப்பதை கண்டு மிரண்டு போய் மின் இணைபை துண்டித்து விட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தான். போலீசார் விரைந்து வந்து விபரீதமாக உயிரை மாய்த்துக் கொண்ட சாபு மற்றும் ஷீஜாவின் சடலங்களை மீட்டு பிணக்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

முதலில் கணவன் மனைவி இருவரும் தங்கள் உடலில் மின்சார வயரை சுற்றிக் கொண்டு வயரை பிளக்போர்டில் சொறுகி மின் இணைப்பு கொடுத்து தங்கள் மீது மின்சாரத்தை பாய்ச்சி உயிரை மாய்த்துக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

அதே போல கேரளாவின் ஆட்டிங்கல் பகுதியை சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவன ஊழியரான தேவராஜன் என்பவர், தனது மனைவி மற்றும் அவரது நண்பர்களால் தான் உயிரை விட உள்ளதாகவும், எத்தனையோ முறை அழைத்தும், வெளி நாட்டில் தங்கி இருக்கும் மனைவி வரமறுத்ததால், தன் உயிரிழப்புக்கு இவர்கள் தான் காரணம் என்று முக நூலில் மனைவி மற்றும் அவரது நண்பர்களின் படத்துடன் தற்கொலை கடிதத்தை பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்து உறவினர்கள், போலீசுக்கு தகவல் அளித்த நிலையில், போலீசார் நடவடிக்கையை தொடங்குவதற்கு முன்பாக தனது மகளை வீட்டில் விட்டு விட்டு, மகனை மட்டும் காரில் ஏற்றிக் கொண்டு வேகமாக சென்று டேங்கர் லாரி ஒன்றின் மீது மோதி உள்ளார்.
இதில் தந்தை மகன் இருவரும் உடல் நசுங்கி பலியாயினர்.

இந்த சம்பவம் தொடர்பாக வெளி நாட்டில் வசித்து வரும் தேவராஜனின் மனைவியை அழைத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தற்கொலை செய்து கொள்வது கோழைத்தனம் என்ற நிலையில், வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் விபரீத முடிவை கூட வில்லங்கமாகவே செய்கின்றனர் என்று போலீசார் தலையில் அடித்துக் கொள்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments