வீட்டின் வெளியே நின்றிருந்த கல்லூரி பேராசிரியரை அரிவாளால் தாக்க முயன்ற கூலித்தொழிலாளி கைது..!

0 1485
வீட்டின் வெளியே நின்றிருந்த கல்லூரி பேராசிரியரை அரிவாளால் தாக்க முயன்ற கூலித்தொழிலாளி கைது..!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மதுபோதையில் கல்லூரி பேராசிரியரை அரிவாளால் தாக்க முயன்ற கூலித்தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

தெள்ளந்தி பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியை அஜிதாவுக்கும், அவரது வீட்டின் அருகே வசிக்கும் அஜித் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

நேற்றிரவு மதுபோதையில் இருந்த அஜித், வீட்டின் வாசலில் நின்றிருந்த அஜிதாவை ஓடி வந்து அரிவாளால் தாக்க முயன்றார்.

தன்னை தாக்க வந்ததை பார்த்த பேராசிரியை உடனே வீட்டிற்குள் சென்றதால் உயிர்தப்பினார். இந்நிலையில், தலைமறைவாக இருந்த கூலித்தொழிலாளி அஜித்தை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments