கழிவுநீர் கால்வாய் தோண்டும் போது மண் சரிவு.. கார் மீது மரம் விழுந்ததில் பெண் வங்கி மேலாளர் உயிரிழப்பு..!
சென்னை கேகே நகரில் கார் மீது மரம் சாய்ந்து விழுந்ததில் பெண் வங்கி மேலாளர் உயிரிழந்தார்.
கழிவுநீர் கால்வாய் தோண்டும் போது மண் சரிவால் அருகில் இருந்த பெரிய மரம் கீழே சாய்ந்து, அவ்வழியாக சென்ற கார் மீது விழுந்தது.
காரின் பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் வாணி கபிலன் என்பவர் உயிரிழந்தார்.
காரில் அவருடன் பயணம் செய்த அவரது தங்கை மற்றும் ஓட்டுனர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Comments