ரியாலிட்டி ஷோ படபிடிப்பின் போது ஆபத்தான மலையில் கடும் வெப்பத்தில் சிக்கி வெயில் தாங்காமல் மயக்கமடைந்த படக்குழுவினர்

0 1579

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள மலை ஒன்றில் ரியாலிட்டி ஷோ படம்பிடித்துக் கொண்டிருந்த குழுவினர் கடும் வெப்பத்தில் சிக்கியதால் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.

கடல் மட்டத்திலிருந்து 2704 அடி உயரத்தில் அமைந்துள்ள அந்த மலை செங்குத்தான பாறைகளை கொண்டதாகும். அங்கு கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அந்த குழுவினர் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

ஆனால், வெயிலின் தாக்கம் 108 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியதால் அவர்களில் சிலர் மயங்கி விழுந்தனர். ட்ரோன்கள் மூலம் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments