அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதால் அதிமுக பொதுக்குழுவைக் கூட்ட அவைத்தலைவருக்கு அதிகாரம் - சி.வி.சண்முகம் பேச்சு

0 1836

ஓ.பன்னீர்செல்வத்துக்கு இருந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டாதால் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவைத் தலைவருக்குப் பொதுக்குழுவைக் கூட்ட அதிகாரம் உண்டு என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு மீண்டும் ஜூலை 11ஆம் நாள் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் முன்னாள் அமைச்சர்கள், அதிமுக மூத்த நிர்வாகிகள் தீவிர ஆலோசனை நடத்தினர். அதிமுக பொதுக்குழு தொடர்பாகத் தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றை அணுகுவதற்கு ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றுள்ள நிலையில் இந்த ஆலோசனை நடைபெற்றுள்ளது.

எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுக அவைத்தலைவராகத் தமிழ்மகன் உசேன் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், ஜூலை 11ஆம் நாளில் பொதுக்குழுவைக் கூட்ட அவருக்கு அதிகாரம் உள்ளதாகவும் தெரிவித்தார். ஓ.பன்னீர்செல்வத்துக்கு இருந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதாகவும் தெரிவித்தார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments