காலியாக உள்ள 13,300 ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்ப பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு வெளியீடு.!
தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 13 ஆயிரத்து 300 ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்ப பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏழாயிரத்து ஐநூறு ரூபாய் தொகுப்பூதியமும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பத்தாயிரம் ரூபாயும், முதுகலை ஆசிரியர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம் என்ற அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், மூத்த பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்டோர் அடங்கிய குழு ஆசிரியர் தேர்வை நடத்த வேண்டுமென அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments