அமேசான் நிறுவனத்தில் சுயமாக செயல்படும் ரோபோக்கள் அறிமுகம்.. பொருட்களை ஏற்றும் ட்ராலிகளை கையாளுவதில் கன கச்சிதம்..!
மின்னனு வர்த்தகத்தில் தலைசிறந்து விளங்கும் அமேசான் நிறுவனம் முழுவதும் சுயமாக இயங்கும் டெலிவரி ரோபோக்களை அறிமுகம் செய்துள்ளது.
அந்நிறுவனத்தின் பொருட்களை அனுப்பி வைக்கும் பிரிவில் இந்த ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெரிய டிஸ்க் வடிவத்தில் காணப்படும் இந்த ரோபோக்கள், பொருட்கள் அடுக்கப்பட்ட டிராலிகளை கொண்டுவருவது, காலி டிராலிகளை கொண்டு வந்து சேர்ப்பது போன்ற பணிகளை கனகச்சிதமாக செய்கின்றன.
பேட்டரியால் இயங்கும் இந்த ரோபோக்களில் சார்ஜ் குறைந்தால் தானாகவே சென்று மின்இணைப்பில் பொருந்தி, அவை சார்ஜ் ஏற்றிக்கொள்கின்றன.
Comments