சத்துணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு வயிற்று வலி, மயக்கம்.. 43 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

0 2180
சத்துணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு வயிற்று வலி, மயக்கம்.. 43 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே, சத்து மாத்திரை மற்றும் மதிய உணவு சாப்பிட்ட அரசுப்பள்ளி மாணவ மாணவிகள் 43 பேருக்கு வயிற்று வலி மற்றும் மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

படிஅக்ரகாரம் கிராமத்தில் உள்ள அந்த அரசு நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் 61 மாணவ மாணவிகளுக்கு காலையில் ZINC மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன.

பின் மதியம் சத்துணவு மற்றும் முட்டை பரிமாரப்பட்டுள்ளது. அதனை சாப்பிட்ட 43 பேருக்கு தலை சுற்றல், வயிற்று வலி, மயக்கம் ஏற்பட்டதால் அவர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments