"இந்தியாவும், சீனாவும் ரஷ்ய எண்ணெயை அதிக அளவில் வாங்கக்கூடும்" - அமெரிக்கா
அமெரிக்கா எதிர்பார்த்ததை விட இந்தியாவும், சீனாவும் ரஷ்ய எண்ணெயை அதிக அளவில் வாங்கலாம் என்பதால், சர்வதேச சந்தையில் விநியோக நெருக்கடி தணித்து விலை குறைந்துள்ளதாக அதிபர் ஜோ பைடனின் பொருளாதார ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையானது இம்மாத தொடக்கத்தில் பேரலுக்கு 122 டாலர்களாக இருந்த நிலையில், தற்போது 105 டாலர்கள் என்ற அளவிற்கு குறைந்துள்ளது.
இது குறித்து தெரிவித்த பைடனின் பொருளாதார ஆலோசகர்கள் குழுவின் தலைவரான சிசிலியா, தற்போது கச்சா எண்ணெய் சந்தை நிலையற்றதாக உள்ளதாக கூறினார்.
மேலும், விலை குறைவதை வரவேற்பதாக தெரிவித்த அவர், அதன் பயன்கள் நுகர்வோர்களுக்கு சென்றடையும் என நம்புவதாகவும் குறிப்பிட்டார்.
Comments