2 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த ஹெர்குலிஸ் சிலையின் தலை கண்டெடுப்பு.. ஆழ்கடலில் பாறைகளுக்கு அடியில் இருந்து மீட்கப்பட்டது..!
கிரீஸ் நாட்டு கடல்பகுதியில் ஆழ்கடலில் மூழ்கி கிடக்கும் பழங்கால ரோமானிய வரலாற்றுக் கால கப்பலின் இடிபாடுகளில் இருந்து, 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஹெர்குலிஸ் சிலையின் மார்பிள் தலை பாகத்தை ஆராய்ச்சியாளர்கள் மீட்டுள்ளனர்.
கடந்த 120 வருடங்களாக அந்த கப்பலை பற்றிய ஆராய்ச்சிகள் நடைப்பெற்று வருகின்றன. ஏற்கனவே 1900 ஆம் ஆண்டில் ஹெர்குலிஸின் பாதி சிலை மீட்கப்பட்ட நிலையில், தற்போது அதன் தலைபாகம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஆழ்கடலில், பாறைகளுக்கு அடியில் இருந்து நீச்சல் வீரர்களால் மீட்கப்பட்டுள்ள ஹெர்குலிஸ் தலையுடன், 2 மனித பற்கள், கப்பலின் உடைந்த பாகங்கள், மற்றொரு மார்பிள் சிலையும் மீட்கப்பட்டுள்ளன.
Comments