சுமூக பேச்சுவார்த்தைக்கு ஓ.பன்னீர்செல்வம் எப்போதும் தயார் - வைத்தியலிங்கம்

0 1550

தீர்மானங்கள் ரத்து செய்யப்பட்டதன் மூலம், பொதுக்குழுக் கூட்டமே செல்லாததாகி விட்டதாகவும், சுமூக பேச்சுவார்த்தைக்கு ஓ.பன்னீர்செல்வம் எப்போதும் தயாராக உள்ளதாகவும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பன்னீர்செல்வத்துடன் ஆலோசனை நடத்தியபின் பேட்டியளித்த அவர், அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும் பொதுக்குழுவை கூட்ட அவருக்கு அதிகாரம் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

மேலும், தீர்மானங்கள் ரத்து செய்தது குறித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளதாகவும் வைத்தியலிங்கம் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY