பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 3 பேர் பலி.. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு

0 1445

கடலூர் மாவட்டம் எம்.புதூர் கிராமத்தில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.

வனிதா என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் வழக்கம் போல ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது மருந்து உராய்வினால் திடீரென வெடி விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது.

அதில், சிக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விசாரணையில், இந்த பட்டாசு ஆலையின் உரிமம் கடந்த ஆண்டு முடிவடைந்தது, மீண்டும் உரிமத்திற்காக விண்ணப்பித்து இருப்பதும் தெரியவந்தது. இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments