இந்தியா, சீனாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி அதிகரிப்பு - அதிபர் புதின்

0 2816

இந்தியா மற்றும் சீனாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி கணிசமான அளவுக்கு அதிகரித்துள்ளதாக ரஷ்ய  அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீதான போருக்குப் பிறகு ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்ய மேற்கத்திய நாடுகள் மறுத்து விட்டன. கடுமையான பொருளாதார நெருக்கடியும் ரஷ்யாவுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியா தொடர்ந்து ரஷ்யாவின் நட்பு நாடாக நீடித்து வருகிறது.சீனாவின் தலைமையில் நடைபெறும் 14வது பிரிக்ஸ் வர்த்தக மாநாட்டை ஒட்டி காணொலியில் பேசிய புதின், பிரிக்ஸ் குழும நாடுகளிடையே பரஸ்பர வர்த்தகம் கடந்த மூன்று மாதங்களில் 38 சதவீதம் அதாவது 45 பில்லியன் டாலர் இலக்கை எட்டியுள்ளதாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments