தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு 2-வது கட்டமாக நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு.!
தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு இரண்டாவது கட்டமாகத் 15,000 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு கடந்த மாதம் தமிழ்நாடு அரசு சார்பில் 33 கோடி ரூபாய் மதிப்பில் 9,100 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டன.
தற்போது இரண்டாவது கட்டமாக, 14,700 டன் அரிசி, 250 டன் ஆவின் பால் பவுடர், 50 டன் மருந்து பொருட்கள் என அறுபத்தி ஏழே முக்கால் கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் இருந்து 15,000 டன் நிவாரணப் பொருட்களுடன் புறப்பட்ட சரக்கு கப்பலை அமைச்சர்கள் சக்கரபாணி, செஞ்சி மஸ்தான், கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொடி அசைத்து அனுப்பி வைத்தனர்.
Comments