கல்லூரி முதல்வரின் கன்னத்தில் அறைந்த எம்.எல்.ஏ

0 115184

கர்நாடகாவில், அரசு ஐடிஐ கல்லூரியில் ஆய்வுக்கு சென்ற எம்.எல்.ஏ அக்கல்லூரியின் முதல்வரை அறைந்துள்ளார்.

மாண்டியாவில் உள்ள கல்லூரியில் நடைபெற்று வரும் பணிகள் குறித்த ஆய்வுக்கு சென்ற மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த எம்.எல்.ஏ ஸ்ரீனிவாஸ், அக்கல்லூரி முதல்வர் நாகநாத்திடம் அது தொடர்பாக கேள்விகள் எழுப்பியதாக தெரிகிறது.

ஆனால், கல்லூரி முதல்வர் அளித்த பதிலில் திருப்தி அடையாத எம்.எல்.ஏ, யாரும் எதிர்பாராத வகையில் சக ஊழியர்கள், அதிகாரிகள் முன்னிலையில் அவரை திட்டியதோடு கன்னத்தில் இருமுறை அறைந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments