ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 130 பேர் பலி ?
ஆப்கானிஸ்தானை உலுக்கிய 6.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட் நகரில் இருந்து சுமார் 44 கிலோ மீட்டர் தொலைவில், 51 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் ஏராளமானோர் காயமடைந்ததாகவும் பெரும்பாலான இறப்புகள் பக்திகா மாகாணத்தில் பதிவாகி இருப்பதாகவும், Nangarhar மற்றும் Khost மாகாணங்களிலும் இறப்புகள் பதிவாகி இருப்பதாகவும் பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது. பாகிஸ்தானின் சில பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Comments