குடியரசுத் தலைவர் வேட்பாளரான திரௌபதி முர்மு கடந்து வந்த பாதை!

0 31789

ஜூன் 20 ஆம் தேதி தமது 64 வது பிறந்த நாளைக் கொண்டாடிய திரௌபதிக்கு பாஜக பிறந்த நாள் பரிசு அறிவித்தது.

குடியரசுத் தலைவர் வேட்பாளராக தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் அவர் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
1997 ஆம் ஆண்டில் முழு நேர அரசியலுக்காக தமது அரசுப் பணியைத் துறந்தவர் திரௌபதி. நிர்வாகத்திறனும் செயல்திறனும் மிக்கவர் என்று பெயர் பெற்றிருந்தார்.

பாஜகவில் இணைந்த அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளுநராக முழுமையான பதவிக்காலம் வகித்தார். ஒடிசாவின் பழங்குடியினத்தவரான ஒரு பெண்ணாக முதன்முறையாக ஆளுநராக பதவி வகித்த நிலையில் குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டால், புதிய உச்சததைத் தொட உள்ளார் திரௌபதி. ஒடிசா அமைச்சரவையிலும் அவர் இடம் பெற்றிருந்தார்.

தமது கணவர் இரண்டு மகன்களைப் பறிகொடுத்த சொந்த வாழ்க்கையின் சோகத்திலும் துவண்டுவிழாமல் போராடி தனது வாழ்க்கையை முன்னகர்த்தி இருக்கிறார்.பழங்குடியின பெண்களின் உரிமைகளுக்காகப் பலமுறை அவர் களப்பணியாற்றியுள்ளார். குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கான முழுமையான தகுதியுடன் திரௌபதி முர்மு போட்டியிடுகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments