களரி பயிற்சியில் வாந்தி எடுத்து உயிரிழந்த மாஸ்டர்..! அதீத உடற்பயிற்சி வினையானதா?

0 6153
களரி பயிற்சியில் வாந்தி எடுத்து உயிரிழந்த மாஸ்டர்..! அதீத உடற்பயிற்சி வினையானதா?

சென்னை ஆலப்பாக்கத்தில் தங்கி களரி பயிற்சி அளித்து அதனை யூடியூப்பில் வீடியோவாக பதிவிட்டு வந்த ஆஜானுபாகுவான மாஸ்டர் கிரிதரன் களரி பயிற்சியின் போது ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் உடற்பயிற்சி பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

கட்டுமஸ்தான உடல் வைத்திருந்தால் நோயின்றி நீடித்த ஆயுளுடன் வாழலாம் என்று யூடியூப்பில் உடல் பயிற்சி வீடியோக்களை வெளியிட்டு வந்த மாஸ்டர் கிரிதரன் என்பவர் தான் 29 வயதில் உயிரிழந்த வீரர்..!

தோற்றத்தில் கே.ஜி.எப் பின் ராக்கி பாய் போல ஆஜானுபாகுவாக இருந்த மாஸ்டர் கிரிதரன் கையில் சுத்தியல் எடுத்து சுற்றிய அந்த வேகத்தை யூடியூப்பில் பார்போருக்கு தாங்களும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற ஆசைவரும்..!

சென்னை ஆலப்பாக்கத்தில் களரி பயிற்சி மையத்தை வைத்து ஏராளமான இளைஞர் மற்றும் இளம் பெண்களுக்கு பயிற்சி அளித்து வந்தவர் 29 வயதான கிரிதரன். தான் பயிற்சி அளிப்பதை வீடியோ எடுத்து அதனை தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு இளைஞர்களிடையே உடற்பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாடு தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வந்தார்.

தீச் சிலம்பம், இரட்டை கரலை கட்டை பயிற்சி, இரட்டை சுருள் வாள் பயிற்சி என பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்தார் கிரிதரன். பள்ளிக்கல்லூரி மேடை களிலும் தனது மாணவர்கள் மூலம் களரி விளையாட்டை பிரபலப்படுத்தி வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று ஆன் லைன் மூலம் தனது மாணவர்களுக்கு மாஸ்டர் கிரிதரன் களரி பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வாந்தி எடுத்த கிரிதரன் மயங்கி விழுந்துள்ளார்.

பயிற்சிமைய ஊழியர்கள் அவரை மீட்டு அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். ஆனால் வழியிலேயே கிரிதரன் பலியானதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்

வாட்ட சாட்டமான உடல் கட்டுடன் முறையாக உடற்பயிற்சி செய்து வந்த மாஸ்டர் கிரிதரன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தாரா ? அல்லது வேறு ஏதாவது காரணமா ? என்பது பிணகூறாய்வு அறிக்கை கிடைக்கப்பெற்ற பின்னர் தான் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

அதே நேரத்தில் அதீத உடற்பயிற்சி கூட சில நேரங்களில் உயிரிழப்பை ஏற்படுத்தி விடும் என்று சுட்டிக்காட்டும் மருத்துவர்கள், கன்னட நடிகர் புனித்ராஜ்குமாரின் திடீர் மரணத்தை சுட்டிக்காட்டுகின்றனர்.

மாஸ்டர் கிரிதரனின் திடீர் உயிரிழப்பு அவரிடம் பயிற்சி எடுத்து வந்த மாணவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments