விஜயகாந்தின் வலது கால் விரல் அகற்றம்..!
நீரிழிவு பிரச்சனை காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வலதுகாலில் விரல் அகற்றப்பட்டதாக அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நேற்று விஜயகாந்தின் விரல் அகற்றப்பட்டதாகவும், தற்போது அவர் நலமுடன் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொடர் சிகிச்சையில் உள்ள அவர் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக குறிப்பிட்டுள்ளது.
Comments