ஆர்த்தி ஸ்கேன்ஸ் தொடர்புடைய இடங்களில் சோதனை.. 100 கோடி ரூபாய் கணக்கில் வராத வருவாய் கண்டுபிடிப்பு.!

0 4823

தமிழகம் முழுக்க ஆர்த்தி ஸ்கேன்ஸ் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், 100 கோடி ரூபாய் வருவாயை மறைத்திருப்பதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனா கால கட்டத்தில் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகள் தொடர்பாக, முறையாக வசூலிக்கப்பட்ட பணத்திற்கு வரி செலுத்தப்பட்டுள்ளதா என்கிற சந்தேகத்தின் பேரில் ஆர்த்தி ஸ்கேன்ஸ் தொடர்புடைய 25 இடங்களில் தொடர்ந்து நான்கு நாட்கள் சோதனை நடத்தப்பட்டது.

இதில் சுமார் 100 கோடி ரூபாய் கணக்கில் வராத வருவாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments