மின்சார காரின் முன்னோட்ட காட்சியை வெளியிட்ட ஓலா நிறுவனம்..

0 5061
மின் ஸ்கூட்டர் விற்பனையில் ஈடுபட்டு வரும் ஓலா நிறுவனம், தங்களது மின்சார காரின் முன்னோட்ட காட்சியை வெளியிட்டுள்ளது.

மின் ஸ்கூட்டர் விற்பனையில் ஈடுபட்டு வரும் ஓலா நிறுவனம், தங்களது மின்சார காரின் முன்னோட்ட காட்சியை வெளியிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி அருகே தங்களது புதிய தொழிற்சாலை அமைய உள்ள இடத்தில் வாடிக்கையாளர் தின நிகழ்ச்சியை ஓலா நிறுவனம் நடத்தியது. நிகழ்ச்சியின் ஒருபகுதியாக, மின்சார காரின் தோற்றம் அடங்கிய வீடியோ காட்சி திரையிடப்பட்டது.

தங்களது மின்சார காரை அடுத்தாண்டு ஓலா வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று கார் தொடர்பாக மேலும் பல தகவல்கள் அறிவிக்கப்பட உள்ளதாக அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments