கோவையில் 3 கிலோ போலி நகைகளை அடகுவைத்து பண மோசடியில் ஈடுபட்ட வங்கி அதிகாரிகள் இருவர் கைது.!
கோவையில், 3 கிலோ போலி நகைகளை அடகுவைத்து பண மோசடியில் ஈடுபட்ட வங்கி அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
சேரன்மாநகர் இந்தியன் வங்கியில், மேலாளராக பணியாற்றிய பிரேம்குமார் மற்றும் உதவி மேலாளராக இருந்த உஷா ஆகியோர் கடந்த ஆண்டு தங்கமூலாம் பூசப்பட்ட பித்தளை நகைகளை அடகுவைத்து பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இது தெரியவந்ததையடுத்து, வங்கியின் மண்டல மேலாளர் சுப்பிரமணியன் கோவை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகாரளித்தார்.
விசாரணையில் பிரேம்குமார், உஷா உட்பட இந்த விவகாரத்தில் 12 பேருக்கு தொடர்பு இருப்பதும், போலி நகைகளை வைத்து பணம் பெறுவதற்கு ரெஜி என்பவர் புரோக்கராக செயல்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து நேற்றிரவு பிரேம்குமார் மற்றும் உஷாவை போலீசார் கைது செய்தனர்.
Comments