தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

0 8055
தமிழகம் முழுவதும் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன... 7 இலட்சத்துக்கு மேற்பட்டோர் தேர்வு எழுதியதில் 92 புள்ளி 3 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றுள்ளனர்...

பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வெழுதிய மாணவியரில் 94 புள்ளி 8 விழுக்காட்டினரும், மாணவர்களில் 89 புள்ளி 4 விழுக்காட்டினரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 7127 மேல்நிலைப் பள்ளிகள் உள்ள நிலையில், 2120 பள்ளிகளில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகப்பட்சமாகத் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 97 விழுக்காட்டினரும், கோவை மாவட்டத்தில் 96 புள்ளி 3 விழுக்காட்டினரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அரசு பள்ளிகள் 86 விழுக்காடும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 94 புள்ளி 3 விழுக்காடும், மெட்ரிக் பள்ளிகள் 98 புள்ளி 7 விழுக்காடும் தேர்ச்சி விகிதம் கொண்டுள்ளன. அறிவியல் பாடப்பிரிவுகளில் 93 புள்ளி 6 விழுக்காட்டினரும், வணிகவியல் பாடப் பிரிவுகளில் 92 புள்ளி 9 விழுக்காட்டினரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கலைப்பிரிவுகளில் 84 புள்ளி 6 விழுக்காட்டினரும், தொழிற்பாடப் பிரிவுகளில் 79 புள்ளி 8 விழுக்காட்டினரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  

புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பில் 14 ஆயிரத்து 423 பேர் தேர்வெழுதியதில் 13 ஆயிரத்து 865 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதியோரில் தேர்ச்சி பெற்றோரின் விகிதம் 96 விழுக்காடாகும். அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 91 புள்ளி ஒன்பது விழுக்காடாகும். தனியார்ப் பள்ளிகளில் 99 புள்ளி 2 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுச்சேரி, காரைக்காலில் மொத்தம் 154 மேல்நிலைப் பள்ளிகள் உள்ள நிலையில் 68 பள்ளிகளில் தேர்வெழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments