சென்னையில் இரவில் பெய்த கனமழையால் குளிர்ச்சியான சூழல்

0 3324
சென்னையில் இரவில் பெய்த கனமழையால் குளிர்ச்சியான சூழல்

சென்னையில் பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், இரவில் பெய்த கனமழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

லேசான தூறலாக ஆரம்பித்த மழை நள்ளிரவில் இடி மின்னலுடன் கனமழையாகக் கொட்டியது. பட்டினப்பாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு, கிண்டி, பல்லாவரம், மந்தைவெளி, அடையாறு, தரமணி, ராயப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments