கொங்கண ரயில்வேயை மின்மயமாக்கும் திட்டத்தை இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி

0 3203
கொங்கண ரயில்வேயை மின்மயமாக்கும் திட்டத்தை இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி

இரண்டு நாள் பயணமாக பெங்களூர் வரும் பிரதமர் மோடி இன்று கொங்கண ரயில்வேயை மின்மயமாக்கும் திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். 

பெங்களுரூவில் இன்று பிற்பகல் நடைபெறும் நிகழ்ச்சியில் மின் மயமாக்கப்பட்ட இருப்புப் பாதைகளில் உடுப்பி, மட்கான், ரத்னகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ரயில்களை கொடியசைத்து பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

உடுப்பி ரயில் நிலையத்தில் இந்த நிகழ்ச்சியை காணொலி வாயிலாக அரங்கேற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.கர்நாடகத்தின் தொக்கூரில் இருந்து மகராஷ்ட்ராவின் ரோஹா வரையிலான 741 கிலோமீட்டர் தூர ரயில் பாதை முழுவதும் மின்மயமாக்கப்பட்டுள்ளது.

இத்தடத்தில் 35 இணை ரயில்கள் தென் மாவட்டங்களுடன் வட மாநிலங்களை இணைக்கும். மங்களூர்-மும்பை இடையே இதில் இரண்டு இணை ரயில்கள் இயக்கப்படும்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் இன்று கலந்துக் கொள்ளும் பிரதமர் மோடி நாளை காலையில் சர்வதேச யோகா தினத்தை மைசூர் அரண்மனையில் தொடங்கி வைக்கிறார். பிரதமர் பெங்களுரு வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments