செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

0 3278

44 வது செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான ஜோதி ஓட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் ஜுலை 28ஆம் தேதி முதல் அந்த தொடர் நடைபெற உள்ளது.

ஒலிம்பியாட் போட்டியில் முதல் முறையாக, 'ஜோதி ஓட்டம்' இந்தாண்டு முதல் தொடங்கும் நிலையில், அந்நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் ஒருபகுதியாக கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பின்னர் பேசிய பிரதமர், நமது முன்னோர் கண்டுபிடித்த சதுரங்கத்தை
விளையாடும் குழந்தைகள், சிக்கல்களை தீர்க்கும் திறன் பெற்றவர்களாக வளர்வதாக கூறினார்.

சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் ஆர்கடி வோர்கோவிச் பிரதமரிடம் ஜோதியை ஒப்படைத்ததை அடுத்து, கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்திடம் அது வழங்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments