திருச்சி : நூடுல்ஸ் சாப்பிட்ட 2 வயது குழந்தை உணவு ஒவ்வாமையால் உயிரிழப்பு

0 5022

திருச்சியில் நூடுல்ஸ் சாப்பிட்ட 2 வயது குழந்தை உணவு ஒவ்வாமையால் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாளக்குடியை சேர்ந்த சாய்தருண் என்ற குழந்தைக்கு, சில நாட்களுக்கு முன் உடலில் அலர்ஜி ஏற்பட்டதால், பெற்றோர்கள் மருத்துவரிடம் அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தனர்.

வெள்ளிக்கிழமை இரவு சாய் தருணுக்கு அவரது தாய் நூடுல்ஸ் சமைத்து கொடுத்துவிட்டு மீதமுள்ளவற்றை பிரிட்ஜில் வைத்து மறுநாள் அதனை சாப்பிட கொடுத்ததாக கூறப்படுகிறது.

மாலை வரை சோர்வாக இருந்த சாய்தருண், திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தான். உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஏற்கனவே உடல் அலர்ஜியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் துரித உணவான நூடுல்ஸை உண்டதால் ஃபுட் பாய்சன் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.

உணவை சமைத்த 2 மணி நேரத்திற்குள்ளாகவே காற்று புகாத பெட்டியில் அடைத்து அதனை பிரிட்ஜில் வைக்க வேண்டும் என்றும், மீண்டும் அதனை சாப்பிடும் முன் சூடுபடுத்தியே பரிமாற வேண்டும் என்றும் துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments