உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்யும் திட்டத்துக்கு அனுமதி வழங்கவுள்ள நேட்டோ
மாட்ரிட்டில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள நேட்டோ மாநாட்டில், உக்ரைனுக்கு உதவி ஆயுத தொகுப்பு வழங்கும் முடிவுக்கு அனுமதி வழங்கப்படும் என நேட்டோ செயலாளர் ஜெனரல் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார்.
ஜெர்மன் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நீண்ட காலத்துக்கு நீடிக்கும் எனவும், நேட்டோ அமைப்பால் வழங்கப்படும் உதவித்தொகுப்பு டான்பாஸ் பிராந்தியத்தை ரஷ்ய ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க உதவும் எனவும் கூறியுள்ளார்.
Comments