அதிமுகவில் ஒற்றைத் தலைமைக் கோரிக்கை.. எடப்பாடி பழனிசாமிக்குப் பெருகும் ஆதரவு..!
அதிமுகவில் ஒற்றைத் தலைமைக் கோரிக்கைக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்களும் நிர்வாகிகளும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்றத்தை நாடினால் அதைச் சந்திக்க எடப்பாடி பழனிசாமி தயாராக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமைக் கோரிக்கை தொண்டர்களிடமும் நிர்வாகிகளிடமும் தீவிரமடைந்துள்ள நிலையில் அந்தக் கோரிக்கைக்கு ஓ.பன்னீர்செல்வத்தை இணங்கச் செய்வதற்காகச் செங்கோட்டையன், தம்பிதுரை ஆகியோர் பேச்சு நடத்தினர்.
அதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், தற்காலிகமாகப் பொதுக்குழுக் கூட்டத்தை ஒத்தி வைக்கக் கோரி நீதிமன்றத்தை நாட ஓ.பன்னீர்செல்வம் தரப்பு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்துத் தம்பிதுரை, செங்கோட்டையன் ஆகியோரிடம் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாகக் கூறப்படுகிறது.
ஒற்றைத் தலைமைக்குப் பதிலாக 14 பேரை உறுப்பினர்களாகக் கொண்ட உயர்நிலைச் செயல் திட்டக் குழுவை உருவாக்கப் பன்னீர்செல்வம் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்பது காலத்தின் கட்டாயம் எனக் கூறியுள்ள முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
Comments