ரஷ்யாவிடமிருந்து இந்தியா கொள்முதல் செய்யும் நிலக்கரியின் அளவு அண்மைக்காலத்தில் பல மடங்கு அதிகரிப்பு.!
ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் நிலக்கரி கிடைப்பதால் அங்கிருந்து இந்தியா கொள்முதல் செய்யும் நிலக்கரியின் அளவு அண்மைக்காலத்தில் பல மடங்கு அதிகரித்துள்ளது.
ரஷ்யா மீது மேலைநாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ள நிலையில், அங்கிருந்து 30 விழுக்காடு தள்ளுபடி விலையில் நிலக்கரி விற்க வணிகர்கள் முன்வந்துள்ளனர்.
இதனால் கடந்த 20 நாட்களில் மட்டும் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்த நிலக்கரி அளவு, முந்தைய ஆண்டின் இதே காலத்தைவிட ஆறு மடங்கு அதிகரித்துள்ளதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல் ரஷ்யாவில் இருந்து 20 நாட்களில் 222 கோடி டாலர் மதிப்புக்கு இந்தியா பெட்ரோலியம் இறக்குமதி செய்துள்ளது.
Comments