குரங்கு அம்மை நோயால் இதுவரை 30 நாடுகளில் 1,880 பேர் பாதிப்பு - உலக சுகாதார அமைப்பு
குரங்கு அம்மை நோயால் இதுவரை 30 நாடுகளில், ஆயிரத்து 880 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதில், 85 சதவீத பாதிப்பு ஐரோப்பிய நாடுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கு அடுத்தப்படியாக பிரிட்டனில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு, நேற்று ஒரே நாளில் புதிதாக 50 பேருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பு 574ஆக அதிகரித்துள்ளது.
இதில், பெரும்பாலான பாதிப்பு ஓரினச்சேர்க்கையாளர்களிடம் கண்டறியப்பட்டுள்ளதாக பிரிட்டன் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Comments