"வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்க வேண்டும்" - மத்திய அரசு அறிவிப்பு
தேர்தல் நடைமுறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் 4 அறிவிப்புகளை மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் சட்டத்தில் பாலின சமத்துவத்தை பேணும் வகையில் மனைவி என்ற வார்த்தை வாழ்க்கைத்துணை எனக் குறிப்பிட்டு திருத்தம் செய்யப்படும் என்றும் தொலைத்தூர பகுதிகள், வெளிநாடுகளில் பணியாற்றும் ராணுவ வீரர்களின் வாழ்க்கைத்துணை வாக்களிக்க வாய்ப்பு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments