குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த மழை.. ரப்பர் படகு மூலம் மக்களை மீட்டு வரும் மீட்புக்குழுவினர்..!
திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆலங்காயம், நாட்றம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்தது.
மேலும், திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு பகுதிகளில் அதிகளவில் மழை நீர் தேங்கியதால், வீடுகளுக்குள் சிக்கி தவித்த மக்களை மீட்புக்குழுவினர் ரப்பர் படகு மூலம் மீட்டனர் .
அதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழை காரணமாக பரசனேரி நிரம்பியது.
ஏரியின் உபரி நீர் செல்லும் கால்வாய் அடைப்பு ஏற்பட்டதால், ஏரிக்கரை பகுதியில் உள்ள அண்ணாநகரில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது.
இதனால் மக்கள் சிரமத்திற்குள்ளான நிலையில் ஏரியின் உபரி நீர் செல்லும் பாதையில் உள்ள அடைப்புகளை பொதுமக்களே அகற்றி நீரை வெளியேற்றினர்.
Comments