ரூ.15.5 கோடியை பாதுகாத்தால் ரூ.4.5 கோடி கமிஷன் என மோசடி… ஏமாந்த இளைஞர்
அமெரிக்க ராணுவம் தந்த பணத்தை பினாமி போல் பாதுகாத்தால் நான்கரை கோடி ரூபாய் கமிஷன் தருவதாக கூறி தேனி இளைஞரிடம் 36 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தேனி லட்சுமிபுரத்தை சேர்ந்த முருகானந்தத்தை பேஸ் புக் மூலம் தொடர்பு கொண்ட எமிலி ஜோன்ஸ் என்பவர், தான் அமெரிக்க ராணுவத்தில் செவிலியராக பணியாற்றுவதாகவும், சிரியா போர் மூலம் கிடைத்த பதினைந்தரை கோடி ரூபாய் பணத்தை பாதுகாக்க நம்பிக்கையான ஆள் வேண்டும் என்றும் அதற்கு நான்கரை கோடி ரூபாய் கமிஷன் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியதாக கூறப்படுகிறது.
நான்கரை கோடி ரூபாயை எதிர்பார்த்த முருகானந்தத்தை, பல்வேறு தொலைபேசிகளில் தொடர்புகொண்ட நபர்கள், சுங்கத்துறை வரி உள்ளிட்ட பல்வேறு சோதனைகளை கூறி பல வங்கிக் கணக்குகள் மூலம் 36 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் வரை கறந்ததாக கூறப்படுகிறது. தான் ஏமாற்றப்படுவதை தாமதாக அறிந்த முருகானந்தம் அளித்த புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Comments