டெல்லி உள்ளிட்ட 6 உயர்நீதிமன்றங்களுக்குத் தலைமை நீதிபதிகள் அடுத்து வரும் நாட்களில் பொறுப்பேற்க உள்ளதாக தகவல்
டெல்லி உள்ளிட்ட 6 உயர்நீதிமன்றங்களுக்குத் தலைமை நீதிபதிகள் அடுத்து வரும் நாட்களில் பொறுப்பேற்க உள்ளனர். இதில் இருவர் தலைமை நீதிபதிகளாக பதவி உயர்வு பெறுகின்றனர் .
தெலுங்கானா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சதீஷ் சந்திரா சர்மா டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு அதே தகுதியுடன் மாற்றப்படுகிறார்.டெல்லி உயர் நீதின்றத் தலைமை நீதிபதி பட்டேல் கடந்த மார்ச் மாதம் ஓய்வு பெற்றதையடுத்து சில மாதங்களாக தலைமை நீதிபதி பதவி அங்கு காலியாக உள்ளது.
நீதிபதிகள் தொடர்பான முறையான அறிவிக்கை சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த மாதம் கொலிஜீயம் அமைப்பு இந்த நீதிபதிகளின் பெயர்களை மத்திய சட்ட அமைச்சகத்திற்குப் பரிந்துரை செய்திருந்தது.
Comments