அமெரிக்காவை வாட்டி வதைக்கும் கடும் வெப்பம்.. 2000 கால்நடைகள் பரிதாபமாக பலி..!
அமெரிக்காவின் கென்சாஸில் நிலவும் கடும் வெப்பத்தினால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் பல மாகாணங்களில் வரலாறுகாணாத அளவுக்கு கடும் வெப்பம் நிலவிவருகிறது. இதில் மாட்டிறைச்சி வர்த்தகத்தில் சிறந்து விளங்கும் கென்சாசும் ஒன்று.
கடும் வெப்பத்தால் அங்கு பண்ணை புல்வெளிகளில் கால்நடைகள் உயிரிழந்து கிடக்கின்றன. அவற்றை அப்புறப்படுத்தி வரும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
புவி வெப்பமயமாதலால் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
Comments