மனைவியின் நகைகளை அடகு வைத்து ஆன்லைன் ரம்மி விளையாடி ரூ.20 லட்சம் வரை இழந்தவர் தற்கொலை

0 4090

சென்னை மணலியில் ஆன்லைன் ரம்மி விளையாடி 20 லட்சம் ரூபாய் பணத்தை இழந்ததால் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுவது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை மணலி அறிஞர் அண்ணா தெருவில் வசித்து வரும் நாகராஜ், ஒப்பந்த அடிப்படையில் பெயிண்டராக வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த  6 ஆண்டுகளாக நாகராஜ் செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாடி வந்ததாகவும், அதில் ஏற்கனவே பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்த அவர்,மேற்கொண்டு மனைவியின் நகைகளை அடகு வைத்தும் ஆன்லைன் ரம்மி விளையாடி சுமார் 20 லட்ச ரூபாய் வரை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் நாகராஜ் தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments