திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லாத சூழல் - எல்.முருகன்
திமுக ஆட்சிக்கு வந்தாலே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுவிடுவதாகவும், குற்றங்கள், கொலைகள் அதிகரித்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் முருகன் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி.இராமலிங்கம் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற பின், செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் முருகன், உலகத் தரமுள்ள மீன்பிடி துறைமுகமாக மாற்ற இந்தியாவில் தேர்வு செய்யப்பட்டவற்றில் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகமும் உள்ளதாகத் தெரிவித்தார்.
Comments