அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து பல்வேறு மாநிலங்களில் தொடரும் போராட்டம்... ரயில்களுக்கு தீ வைப்பு

0 3770

ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகளுக்கு ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் வலுத்துள்ள நிலையில் பீகார், தெலுங்கானா, உத்திர பிரதேச மாநிலங்களில் ரயில்களுக்கு இன்றும் தீ வைக்கப்பட்டன.

பீகாரின் Luckeesarai ரயில் நிலையத்தில் ஜம்மு தாவி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு தீ வைக்கப்பட்டதில் 4 பெட்டிகள் எரிந்து சேதமடைந்தன. உத்தரப் பிரதேசத்தின் பாலியா ரயில்வே நிலையத்திலும் தெலுங்கானாவின் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் ரயில்களுக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த கடைகளை அடித்து நொறுக்கினர்.

அக்னிபாத் திட்டத்தில் ராணுவத்தில் சேர வயது வரம்பை 23 ஆக உயர்த்திய மத்திய அரசு, 4 ஆண்டு கால பணி முடிவடைந்த பின்னர் வீரர்களின் எதிர்காலம் உறுதி செய்யப்படும் என விளக்கமளித்துள்ள நிலையிலும் போராட்டங்கள் தொடருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments