ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை அமல்படுத்த இந்தியாவை கட்டாயப்படுத்தவில்லை - அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர்!
இந்தியாவுடனான உறவில் தொலைநோக்குடன் செயல்படுவதாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை அமல்படுத்த அமெரிக்கா இந்தியாவை கட்டாயப்படுத்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ரஷ்யாவுக்கு எதிரான ஐநா.சபை வாக்கெடுப்புகளில் இந்தியா பங்கேற்காமல் இருப்பது குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்த ஜேக் சுலிவன், இந்தியா இறையாண்மையும் ஜனநாயகமும் உள்ள நாடு தனக்கான முடிவெடுக்கும் அதிகாரம் இந்தியாவுக்கு உண்டு, அதற்கு கட்டளையிட முடியாது என்று கூறினார்.
Comments