தவறான இடத்தில் வாகனத்தை படம் எடுத்து தகவல் தந்தால் ரூ 500 பரிசு... மத்திய போக்குவரத்து அமைச்சகம் அதிரடித் திட்டம்

0 4796

தவறான இடங்களில் வாகனத்தைப் பார்க்கில் செய்தால் அதைப் புகைப்படம் எடுத்து  தகவலை அளிப்பவர்களுக்கு 500 ரூபாய் சன்மானம் வழங்கும் அதிரடித் திட்டத்தை மத்திய போக்குவரத்து அமைச்சகம் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் பார்க்கிங் தொடர்பாக புதிய சட்டம் வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

தவறாகப் பார்க்கிங் செய்தவரிடம் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டால் அதில் 500 ரூபாய் தகவல் அளிப்பவருக்குத் தரப்படும் என்று நிதின் கட்கரி சிரிப்பொலிகளுக்கு நடுவே கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments