பெண்களின் மூளையை ஸ்கேன் செய்து உணர்வுகளை பதிவு செய்யும் தொழில்நுட்பம் அறிமுகம்
வாசனை திரவியங்கள் என்றாலே பெண்களுக்கு அலாதி பிரியம். அதுவும் மனதுக்கு பிடித்த திரவியம் கிடைத்தால் கூடுதல் மகிழ்ச்சி. பெண்களின் இந்த எதிர்பார்ப்பை பிரான்ஸ் நாட்டு நிறுவனம் ஒன்று பூர்த்தி செய்துள்ளது.
அதாவது மூளையை ஸ்கேன் செய்து அவர்கள் மனம் விரும்பும் வாசனை திரவியத்தை கண்டுபிடிக்கும் நவீன தொழில்நுட்பத்தை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இங்கு வரும் பெண்களின் மூளையை ஸ்கேன் செய்து உணர்வுகளை பதிவு செய்யும் போது, விதவிதமான நறுமணங்களை நுகரச் செய்கின்றனர்.
உணர்வுகளால் அவர்களை மிகவும் சந்தோஷமடைய செய்யும் நறுமணத்தை இவர்கள் கண்டுபிடித்து தருகின்றனர்.
Comments